குடியரசு நமது

என் தேசம்

எனை ஆள..

நம் நாடு

நாமும் ஆள..


பட்டொளி வீசும்

பரவசம் 

பாரத தேசமெங்கும்!


கீதம் இசைக்கையில்

கிட்டும் இன்பம்

நின்று நிலைத்திட

நேர்மை கொள்வோம்!


வாழ்ந்து மடிந்திடவா

வார்த்தோம் தேசத்தை?


வீழ்ந்து மடிந்தனரே

விதையாய்

தியாக மாந்தர்...


சிந்தை உளி

துளைக்கத் தானே

சிறந்த தேசம் 

நமதாகும்!


மக்களாட்சி 

மாண்பு காக்க 

மனம் சொல்ல

வாக்களிப்போம்!


பணம் கொண்டு அணுகுவோரை

பிணம் என சாபம் கொள்வோம்!


எச்சில் தட்டில் 

சோறு தின்ன 

என் தேசம் 

பிறரது அல்லவே!


தங்கத் தாம்பூலம்

அறுசுவைக்கு நமக்கும் வாய்க்கும்

தலைவனெல்லாம்

மக்கள் சேவகன் என உணர்ந்து

தலைகணம் 

குறைந்தாலே!


வேட்டியில் மட்டும் கரை போதும்

வேறெங்கும் 

வேண்டாம்!

நமை ஆள

எத்தனிப்போருக்கு!!


குடியரசு காப்போம்

முடியரசுக்கு முடிவுரை எழுதியே..!!!

#VELANz




Comments