Posts

Showing posts with the label couples at 90

தொண்ணூறைத் தொட்ட ஜோடிகள்

Image
  தொண்ணூறைத் தொட்ட ஜோடிகள் தொடர் வண்டியில்... அருகருகே அமர்ந்தனர் என் விழிகள் எட்டிய வீச்சிலும் செவிகள் எட்டிய பேச்சிலுமாய்! உறவினர் இல்ல காதல் கல்யாணம் தொடங்கி உதவாக்கரை பேரன் வரையிலும் பொக்கை வாய் பேச்சிலும் புதிய பார்வையை வியந்தேன்! சுற்றியிருப்போரை சற்றும் கவனம் கொள்ள முற்றும் மறந்தாலும் முனை விரல் கூட உரசிட இடம் தரவில்லை! சன்னல் இருக்கை காலியானதும் சட்டென நகர்ந்தார் நாயகன் தாத்தா! எதிர் இருக்கை பிடிக்க நாயகி பாட்டியும் நகர எங்கிருந்தோ வந்தார் ஐம்பதைக் கடந்த அழகுப் பெண் அமர்ந்தாள் எதிர் இருக்கையில்! மெல்லிய புன்னகையோடு தன் பழைய இடம் வந்த பாட்டி பார்வையால் பேசினாள் தள்ளாடும் தாத்தாவிடம்! ஐம்பதை ஐந்தே நொடியில் அளந்து முடித்த தாத்தாவோ தலை குணிந்தார் வெட்கத்தில்! பாட்டி எழுதிய பார்வைக் கவிதையை புரிந்து ரசித்த தாத்தாவையும் வியந்து கொண்டே இறங்கிய நான் கடந்து போகும் பெட்டிகளை நடந்து போனேன் எதிர் திசையில்! என்ன காதல் வாழுது இந்த வயசுல என வழக்கு மொழியில் உரைப்போரை சபித்துக் கொண்டே ஒற்றை புன்னகையிலும் கவிஎழுதிய 90களுக்குள்ளும் வாழுது காதல் என்று! #VELANz